Home மாவட்ட செய்திகள்தெற்கு மாவட்டம்மதுரை பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு…. கள ஆய்வாளர் கூறிய தகவல்…!!

பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுப்பு…. கள ஆய்வாளர் கூறிய தகவல்…!!

by dailytamilvision.com
0 comment

மதுரை மாவட்டத்திலுள்ள நல்லமரம் கொட்டாணிபட்டி கிராமத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் கள ஆய்வாளர் முனீஸ்வரன் கூறியதாவது, நல்லமரம் கிராமத்தில் உடைந்த நிலையில் 2.5 அடி உயரம், 1.5 அடி அகலம், 6.1 அடி சுற்றளவு, 1.5 அடி விட்டமுடைய முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.


அந்த தாழியின் கழுத்து பகுதியில் வளையம் போன்ற ஆபரணம் வரையப்பட்டுள்ளது. அந்த முதுமக்கள் தாழியின் உட்பகுதியில் மனிதனின் மண்டை ஓடு, மேல்பகுதி, கை, கால் எலும்புகள் உடைந்த நிலையில் உள்ளது. இந்த பகுதியில் பெருங்கற்கால பண்பாட்டு முறை இருந்துள்ளது. இதற்கு சான்றாக கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழி கிராம நிர்வாக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த முதுமக்கள் தாழியை ஆய்வுக்கு உட்படுத்தி பாதுகாக்க வேண்டும் என கூறினார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.