மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சண்டிகரில் குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் 2029 ஆம் ஆண்டிலும் எதிர்க்கட்சி வரிசையில் அமர இந்தியா கூட்டணி தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் 2029ல் பிரதமர் ஆக மோடி மீண்டும் பதவி ஏற்பார் என தெரிவித்தார். மேலும் கடந்த மூன்று தேர்தல்களிலும் காங்கிரசை விட பாஜக கூடுதல் தொகுதிகளை கைப்பற்றியுள்ளது என்பது எதிர்கட்சிக்கு தெரியவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
எதிர்க்கட்சி நிலையற்ற தன்மையை விரும்புகின்றனர் எனவும் இதனால்தான் பாஜக அரசு நீடிக்காது என கூறி வருகின்றனர். இந்த பதவி காலத்தை முழுமையாக பாஜக நிறைவு செய்வதுடன் அடுத்து நடக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம் என உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறார். இதனால் பொறுப்பான எதிர்க்கட்சியாக எப்படி செயல்பட வேண்டும் என அவர்கள் பாடம் படிக்க வேண்டும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.