சினிமா செய்திகள் தமிழ் சினிமா போடு! இன்று வெளியாகும் ”கோட்” படத்தின் சிங்கிள் ப்ரோமோ… வெளியான அறிவிப்பு…!!! Sowmiya Balu2 August 20240125 views நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த படம் குறித்த சூப்பரான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் அடுத்த பாடல் ஆகஸ்ட் 3ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.