சினிமா செய்திகள் தமிழ் சினிமா போடு செம! இனி “பிக்பாஸ் 8” தொகுப்பாளர் இவர்தான்…அதிரடியாக வெளியான ப்ரோமோ… படு வைரல்…!!! Sowmiya Balu5 September 2024096 views சின்னத்திரையில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கொடுத்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தொடர்ந்து விரைவில் பிக்பாஸ் எட்டாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில், இந்த சீசனில் சினிமா பணிகள் காரணமாக என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை என கமல்ஹாசன் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டார். பிக்பாஸ் சீசன் 8ன் அடுத்த தொகுப்பாளர் யார் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகமாகும் சூப்பரான புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.