தீபாவளி விருந்தாக வரும் “அமரன்”…. ரிலீஸ் தேதியை அறிவித்த சிவகார்த்திகேயன்…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவரின் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குடும்பங்களுடன் இணைந்து பார்க்கும்படி இவர் பார்த்து பார்த்து படங்கள் நடிக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அயலான். இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”அமரன்”.

சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படம் வருகிற தீபாவளியன்று அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

https://www.instagram.com/p/C9ha3QGy608

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?