சினிமா செய்திகள் தமிழ் சினிமா போடு செம! “டிமான்டி காலனி 2” எப்போது ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்…!!! Inza Dev11 July 2024079 views இயக்குனர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”டிமான்டி காலனி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் இமைக்கா நொடிகள் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் ”டிமான்டி காலனி 2”. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர்.