சினிமா செய்திகள் செய்திகள் போடு செம! 3 வருடங்களுக்குப் பிறகு இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி… எங்கு நடக்கிறது தெரியுமா…? Sowmiya Balu14 July 20240117 views தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் இளையராஜா. இவர் இசைக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு இவர் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை சென்னையில் ஜூலை 14 இன்று நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் அவரின் பல எவர் கிரீன் பாடல்கள் பாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஸ்வேதா மோகன், எஸ்பிபி சரண், ஹரி சரண், மதுபாலகிருஷ்ணன் மற்றும் பலர் பாட உள்ளனர். மேலும் ஹங்கேரி இசை கலைஞர்களும் இந்த நிகழ்ச்சியில் இசையைமைக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சி சென்னை வொய் எம் சி ஏ மைதானத்தில் இன்று மாலை 6.30 தொடங்கவுள்ளது. மேலும், போக்குவரத்திற்கு மக்கள் வந்து செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.