தஞ்சாவூர் மாவட்ட செய்திகள் போதைக்காக சானிடைசர் குடித்த இருவர் பலி…. பெரும் அதிர்ச்சி….!!!! dailytamilvision.com17 April 20240125 views தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அதிக போதைக்காக சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கட்டிட தொழிலாளிகளான சௌந்தரராஜன், பாலகுரு ஆகிய இருவரும் இன்று காலை வேலைக்குச் செல்லும் முன் மதுவுடன் சானிடைசர் கலந்து அருந்தியுள்ளனர். அதன்பின் சிறிது நேரத்தில் மயக்கமான அவர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.