114
இலங்கையில் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் ஊதியம், ஓய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதிலும் 10,000த்திற்கு அதிகமான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதோடு முக்கிய சாலைகள் பலதும் முடங்கியது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.