செய்திகள் மாநில செய்திகள் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு…பறிபோன உயிர்…!!! Sathya Deva1 August 20240115 views மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் 24 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியை கிண்டல் செய்ய மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை உருவாக்கியுள்ளார். இந்த போலியான கணக்கு மூலம் தனது தோழியிடம் பேசி விளையாடியுள்ளார். ஆனால் இன்ஸ்டாகிராமில் தன்னுடன் பேசிய மனுஷ் மீது அந்த பெண் காதல் வயப்பட்டுள்ளார். அதன் பிறகு மனுசை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பின் அவர் தோழி “சிவம் பாட்டில்” என்ற மற்றொரு போலியான கணக்கை உருவாக்கியிருக்கிறார். இந்த போலியான கணக்கின் மூலம் மனிஷ் அப்பா நான் தான் என்று கூறி தன் மகன் இறந்தாக தெரிவித்து இருக்கிறார். அப்போது அந்தப் பெண் கற்பனையான அவளது காதலன் இறந்த துக்கத்தில் மன உளைச்சல் ஏற்பட்டு ஜூன் 12-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அடுத்து பெண்ணின் தற்கொலைக்கு காரணமான அவளது தோழியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.