ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மகரம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! காரியங்களை சாமர்த்தியமாக செய்து முடித்து பாராட்டுகளை வாங்குவீர்கள்…!! Rugaiya beevi20 December 202403 views மகரம் ராசி அன்பர்களே…! மனதிற்குள் உங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி இருக்கும். காரியங்கள் கூட விரைவாக செயல்படும். அக்கம் பக்கத்தில் அன்பு பாராட்டுவார்கள். எதிர்கால வாழ்க்கைக்கு என்ன வேண்டுமோ செய்து கொள்வீர்கள். புதிய நம்பிக்கை உண்டாகும். தொழில் வியாபாரம் செழிக்கும். தாராள பண வரவை கண்டிப்பாக இருக்கும். வீட்டில் ஒற்றுமை மகிழ்ச்சி இருக்கும். வானங்களில் செல்லும் பொழுது கவனம் வேண்டும். சிலருக்கு விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு. குலதெய்வத்தை வழிபட்டு சொல்லுங்கள். வீண்பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம். தேவையில்லாத அலைச்சலை குறைத்துக் கொண்டால் பாதி பிரச்சனை தீரும். பயணங்கள் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு சுமையாக இருக்கும். நிதானமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பேசி பழகுவீர்கள். பெண்கள் குழப்பமான மனநிலையில் இருந்து விடுபடுவீர்கள். திறமைகளால் வெற்றி உண்டாகும். பெண்களுக்கு ஆழ்ந்த உறக்கம் ஏற்படும். ஓய்வாக காணப்படுவீர்கள். காதல் போன்ற விஷயத்தில் சின்ன சின்ன நெருக்கடி இருந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு சுறுசுறுப்பு மேலோங்கும். சுகமான நித்திரை அமையும். மாணவர்கள் பொறுப்பாக செயல்பட்டு எதிலும் வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..