திருவண்ணாமலை மாவட்ட செய்திகள் மகளை கண்டித்த பெற்றோர்…. 10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!! dailytamilvision.com17 April 20240184 views திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தத்தனூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருந்துள்ளனர். இதில் இரண்டாவது மகள் தீபா அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டு வேலை செய்யாமல் இருந்த தீபாவை பெற்றோர் கண்டித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தீபா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீபாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.