செய்திகள் மாநில செய்திகள் மகாராஷ்டிரா மாநிலம்…பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் திட்டம்…!!! Sathya Deva18 August 2024060 views மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் ஆளுங்கட்சிகளான பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மீண்டும் ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டுகின்றன. அதேவேளையில் காங்கிரஸ், சரத் பவார், உத்தவ் தாக்கரே ஆட்சியை கைப்பற்ற தீவிரமாக உள்ளனர். இதனால் கடும்போட்டி நிலவி வருகிறது. இந்தநியைில் மகாராஷ்டிரா மாநில அரசு பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கும் லட்கி பகின் திட்டம் இன்று முறைப்படி தொடங்கப்பட்டது. புனேவில் இத்திட்டத்தை தொடங்கிய வைத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாய் 3 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த திட்டம் ஆளுங்கட்சிக்கு தேர்தலில் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசுக்கு இது திருப்பு முனையாக அமையாது. அதற்குப்பதில் அவர்களுக்கு U-turn ஆக அமையும் என உத்தவ் தாக்கரே சிவ சேனாவின் சங்சய் ராவத் தெரிவித்துள்ளார். இதற்கு முந்தைய அரசு பல நலத்திட்டங்களை அமல்படுத்தியுள்ளது என்றார். மகாராஷ்டிர மாநிலத்தில் 21 வயது முதல் 60 வயது வரையிலான திருமணம் முடிந்த பெண்கள், விதவை, ஆதரவற்ற பெண்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.