நாட்டின் பல பொருட்கள் கலப்படம் செய்து விற்கப்படுகிறது. இதனால் மக்கள் நோயினால் பெரும் பாதிப்பை அடைந்துள்ளனர். இந்த உணவுகளின் கலப்படங்களால் பின்விளைவுகள் அதிகம் இருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது நாம் அறிவோம்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா நகரத்தில் சிமெண்ட்டால் ஆன வெள்ளைப் பூண்டுகள் விற்கப்படும் சம்பவம் பொதுமக்களை அச்சுறுத்தியுள்ளது. கள்ளச்சந்தை கும்பல் சில்லறை வியாபாரிகள் மூலம் இந்த சிமெண்ட் வெள்ளைப்பூண்டுகளை விற்பனை செய்கின்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொதுமக்கள் உரிய நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.