சினிமா செய்திகள் தமிழ் சினிமா “மங்காத்தா 2” படம் குறித்து சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!! Sowmiya Balu29 August 20240128 views .இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய் வைத்து இயக்கியுள்ள திரைப்படம் “கோட்”. வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்திய நேர்காணலில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு. நடிகர் அஜித்தை சமீபத்தில் பார்த்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்/ அவர் கூறியதாவது, மங்காத்தா 2 திரைப்படத்தை நடிகர் அஜித்தை வைத்து தான் எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர் ரசிகர்கள் என்னை அடித்து விடுவார்கள். மேலும், பல விஷயங்கள் பற்றி பேசினோம். ஆனால் எப்படி நடக்கும் எப்போ நடக்கும் என தெரியாது எனக்கு கூறியுள்ளார்.