செய்திகள் மாநில செய்திகள் மதுபான கொள்கை முறைகேடு…மணீஷ் சிசோடியாக்கு ஜாமின் வழங்கிய கோரி சுப்ரீம் கோர்ட்….!!! Sathya Deva9 August 20240104 views மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்தது. மணீஷ் சிசோடியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது. இதனால் அவர் கடந்த 17 மாதமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மணீஷ் சிசோடியா மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பி.ஆர். காவே மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மணீஷ் சிசோடியாவிற்கு சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கியது. விசாரணையை தொடர்ந்து அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கினர். மேலும், மணீஷ் சிசோடியா தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுயுள்ளார். இந்நிலையில், 17 மாதங்களுக்கு பிறகு திகார் சிறையில் இருந்து இன்று மாலை மணீஷ் சிசோடியா வெளியே வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.