செய்திகள் மாநில செய்திகள் மத்திய அரசு…கருத்து சுகத்திரத்தை பறிக்கும் மசோதாவை ரத்து செய்தது…!!! Sathya Deva13 August 2024040 views சமூக ஊடகங்களில் இயங்கி வரும் சுயாதீன கன்டெண்ட் கிரியேட்டர்களின் வரம்புகளை நிர்ணயிக்கும் வகையில் ஓடிடி மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்களின் நெறிமுறைக்குள் கொண்டுவர திட்டங்களை மத்திய அரசு தீட்டியது. இதில் கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் தணிக்கை செய்து சான்றளிக்கும் குழுவை அமைக்கும் வகையில் மத்திய அரசானது புதிய ஒளிபரப்பு சேவைகள் மசோதாவை கொண்டு வந்தது. இந்த மசோதாவை பற்றி பொதுவெளியில் கடந்த நவம்பர் 10 ஆம் தேதி வெளியிட்டனர். இதில் பொதுமக்கள் இந்த மசோதா மீது தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று கூறியிருந்தது. அப்போது இந்த மசோதா எழுத்து மற்றும் பயிற்சி சுதந்திரத்தை இழக்கும் வகையில் இருந்ததாக கூறப்பட்டிருந்தது. எனவே இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற்றது. இதற்கு பதிலாக விரைவில் புதிய மசோதா தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிவித்து தெரிவித்துள்ளனர்.