செய்திகள் மத்திய அரசு… புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம்…!!! Sathya Deva15 August 2024057 views மத்திய அரசின் உள்துறை செயலராக அஜய்குமார் பல்லா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய உள்துறை செயலாளராக கோவிந்த் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதலின் பேரில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது கோவிந்த் மோகன் கலாசாரத்துறை செயலாளராக பணியாற்றி வருகிறார். அஜய் குமாரின் பதவிக்காலம் கடந்த ஆண்டே மேலும் ஓராண்டிற்கு மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.