உலக செய்திகள் செய்திகள் மனுபாக்கர்- சரப்ஜோத் சிங் ஜோடிக்கு வாழ்த்து….ஜனாதிபதி திரவுபதி முர்மு…!!! Sathya Deva30 July 20240130 views உலகில் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சுடுதலின் பெண்களுக்காக 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனு பாக்கர் வெண்கல பதக்கம் பெற்று இந்தியாவின் பதக்க கணக்கை தொடங்கினார். இதற்கிடையே மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி இன்று நடந்த போட்டியில் தென் கொரியா ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கம் பெற்று அசத்தியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள இரண்டாவது பதக்கம் இதுவாகும். இந்த நிலையில் வெண்கலம் பெற்ற மனுபாக்கர்- சரப்ஜோத் சிங் ஜோடி ஜனாதிபதி திரவுபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று இந்தியாவின் முதல் பெண் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்துள்ளார்மனு பாக்கர் என மிகவும் பெருமைப்படுத்தி உள்ளார். அவருக்கு எதிர்காலத்தின் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துக்கள் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.