சிங்கப்பூரில் 37 வயதான டான் சியாங்லாங்கிற்கு 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் ஒரு வருடத்திற்கு பிறகு தனது மனைவியை பிரிந்தார் சியாங்லாங். ஆனால் அவர்கள் விவாகரத்து பெறவில்லை. சிங்கப்பூர் சட்டப்படி திருமணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியிருந்தால் மட்டும் தான் விவாகரத்து கோரமுடியும். ஆனால் தம்பதியினரில் யாராவது ஒருவரின் மேல் குற்ற வழக்கு இருந்தால் சீக்கிரம் விவாகரத்து பெறமுடியும். ஆகையால் கணவன் ஒரு திட்டம் தீட்டியுள்ளான். 500 கிராம் அளவிலான கஞ்சா செடிகளை வாங்கி மனைவிக்கு தெரியாமல் அவரது காரில் பின்புறம் நட்டு வைத்துள்ளார். இவற்றில் பாதி கஞ்சா செடிகள் நன்றாக வளர்ந்துள்ளது. பின்னர் போலீசார் அவரது காரை சோதனை செய்த போது போதைப்பொருட்களை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.
ஆனால் போலீசாரின் விசாரணையில் அவர் கஞ்சா வளர்த்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. அப்போது அவரது காரில் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்த போது அவரின் கணவன் கஞ்சா செடிகள் நட்டத்தை போலீசார் கண்டுபிடித்தனர். தனது மனைவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என நினைத்துக்கொண்டிருந்தவேளையில் கணவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தற்போது இவருக்கு சுமார் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பபட்டது.சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் பயன்படுத்தினால் அதற்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.