Home செய்திகள் மன்றாடி மன்னிப்பு கேட்ட பதாஞ்சலி நிறுவனம்…வழக்கை முடித்த உச்ச நீதிமன்றம்…!!!

மன்றாடி மன்னிப்பு கேட்ட பதாஞ்சலி நிறுவனம்…வழக்கை முடித்த உச்ச நீதிமன்றம்…!!!

by Sathya Deva
0 comment

பதாஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பல்பொடி, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் நவீன மருந்துகளுக்கு எதிராக விளம்பரம் செய்து வருவதாக இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தது. இதற்கு உச்ச நீதிமன்றம் அலோபதி மருந்துகளை குறிவைத்து தவறான விளம்பரங்களை வெளியிட்டதாக கண்டனம் தெரிவித்தது. இந்த வழக்கில் பதாஞ்சலி இணை இயக்குனர் பாபா ராம்தேவ் மூன்று முறை நீதிமன்றத்திற்கு வந்து மன்னிப்பு கேட்டு உள்ளார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின் போது பதஞ்சலி நிறுவனம் தனது தவறான விளம்பரங்களுக்காக பிரதான பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த மன்னிப்பு சிறிய அளவில் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இனி எந்த வித தவறான விளம்பரங்களையும் வெளியிட மாட்டோம் என்று பதஞ்சலி நிறுவனம் தரப்பு மன்றாடியதை அடுத்து இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.