மரத்தில் சிக்கிய தலை….தீவிரப் பாதுகாப்பில் வனத்துறையினர்….பொதுமக்கள் கோரிக்கை….!!

நீலகிரி மாவட்டத்தில் சில தினங்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பயத்தில் நடமாடி வருகின்றனர். பின்னர் இரவு நேரம் ஊருக்குள் வன விலங்குகள் உலா வந்த நிலையில் தற்போது பகல் நேரத்திலும் உலா வர தொடங்கி விட்டது. இதில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் பெரும் பயத்தில் இருக்கின்றனர். இதனை அடுத்து குன்னூர் அருகாமையில் இருக்கும் பலத்தோட்டம் பகுதியில் சென்ற சில நாட்களாகவே கரடிகள் சுற்றி வந்தன. தற்போது இதன் அருகாமையில் இருக்கும் தேயிலைத் தோட்டத்திற்குள் கரடி ஒன்று புகுந்துள்ளது.

அப்போது அங்கு இருந்த மனிதர்களை பார்த்து பயத்தில் அங்கும் இங்கும் ஓடிய நிலையில் அருகே இருந்த மரத்தை சுற்றி அதில் இருக்கும் கிளைகளில் ஏற முயன்ற போது மரத்தின் இடிக்கில் தலை சிக்கிக்கொண்டதால் அலறியுள்ளது. அந்த அலறல் சத்தம் கேட்ட அருகில் இருந்தவர்கள் கரடியின் தலையை மரத்திலிருந்து மீட்பதற்காக போராடிய நிலையில் அரை மணி நேரத்திற்கு பின் மரத்திலிருந்து தலை விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு கரடி அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இது பற்றி தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் ‌ மேலும் பலத்தோட்ட பகுதியில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!