உலக செய்திகள் செய்திகள் மாநில செய்திகள் மஸ்கட் சென்னை இடையே நேரடி விமானம்…. சலாம் ஏர் நிறுவனம் அறிமுகம்…. பயணிகள் மகிழ்ச்சி….!! Inza Dev12 July 2024076 views ஓமன் தலைநகர் மஸ்கட் சென்னை இடையேயான நேரடி விமான சேவையை இதுவரை ஓமன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மட்டுமே அளித்து வந்தது. தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு நேரடி விமானங்களை அந்நிறுவனம் அளித்து வந்ததால் பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஓமன் நாட்டின் சலாம் ஏர் நிறுவனம் மஸ்கட் சென்னை இடையே நேரடி விமான சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளது. வாரத்தில் வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இயக்கப்படும் சலாம் ஏர் விமானம் மஸ்கட்டில் இருந்து புறப்பட்டு நேரடியாக சென்னை சர்வதேச விமான நிலையத்தை அடையும். பின்னர் மீண்டும் சென்னையில் இருந்து புறப்பட்டு மஸ்கட் செல்லும். இப்படி நேரடி விமானத்தில் சென்னையிலிருந்து மஸ்கட் பயணத்திற்கு நிறுவனம் 10 ஆயிரத்து 500 ரூபாயை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இதற்கு பயணிகளின் வரவேற்பை பொறுத்து சென்னை மஸ்கட் இடையேயான நேரடி விமான சேவையை வாரம் முழுவதும் விரிவாக்கம் செய்ய சலாம் ஏர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.