மாதவிடாய் விடுமுறை…ஒடிசா மாநிலம்…!!!

ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் துணை முதல் மந்திரி பிராவதி பரிடா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். இத்திட்டம் உடனே அமலுக்கு வருகிறது என கூறினார்.

அரசு பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் மாதவிடாய் நாட்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கேரளா, பீகாரில் மாதவிடாய் விடுமுறை அமலில் உள்ளது. தற்போது இந்தப் பட்டியலில் ஒடிசாவும் இணைந்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!