சினிமா செய்திகள் விமர்சனம் மார்க் ஆண்டனி – திரைவிமர்சனம் dailytamilvision.com17 April 20240350 views படத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் செல்வராகவன் டைம் டிராவல் செய்யும் போன் ஒன்றை கண்டுபிடிக்கிறார் இந்த நிலையில் ஒருநாள் விபத்தில் சிக்கி உயிர் இழந்து விட அவர் கண்டுபிடித்த டைம் டிராவல் செய்ய உதவும் போன் மெக்கானிக்காக இருக்கும் விஷால் கையில் கிடைக்கிறது. இந்த படத்தில் மார்க் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஷாலை பொருத்தவரை தனது அப்பா ஆண்டனி தான் தனது அம்மாவை கொன்றுவிட்டார் என்றும் அவர் மிகவும் மோசமானவன் என்றும் நினைத்துக் கொண்டு ஜாக்கி பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்த எஸ் ஜே சூர்யாவை தனது அப்பாவாக நினைத்து வாழ்ந்து கொண்டிருப்பார். இந்த நிலையில் அவரது கையில் டைம் டிராவல் செய்யும் போன் கிடைத்ததால் அதனை வைத்து தனது அம்மாவை காப்பாற்றி விடலாம் என்று விஷால் முடிவு செய்கிறார். ஆனால் இந்த பயணத்தில் அவர் தனது தந்தை எந்த குற்றமும் செய்யாதவர் என்பதை தெரிந்து கொண்டதோடு அவரை கொலை செய்தது தான் தற்போது தந்தையாக நினைத்துக் கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா தான் என்பதை அறிந்து கொள்கிறார். இதன்பிறகு தன் தந்தையை நிகழ்காலத்திற்கு அழைத்து வர முயற்சிக்கும் விஷால் வெற்றி பெற்றாரா இந்த டைம் டிராவலில் என்னென்ன பிரச்சனைகளை அவர் சந்தித்தார் என்பதுதான் மீதி கதையாக உள்ளது. இந்த படத்தில் தந்தை மகன் என விஷால் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் கார்டில் எஸ் ஜே சூர்யாவிற்கு நடிப்பு அரக்கன் என்று போடப்பட்டிருந்தது. அதற்கேற்றார் போல் அவர் சிறப்பாக நடித்துள்ளார். மேலும் படத்தில் வரும் அபிநயா, ரித்து வர்மா, ரெடீம் கிங்ஸ்லி ஒய்.ஜி.மகேந்திரன் போன்றோர் தங்களுக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். டைம் டிராவலை மையமாக வைத்து படம் இயக்குவது என்பது கடினமான காரியமாக இருந்தாலும் அதனை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தெளிவாக செய்து முடித்துள்ளார். மொத்தத்தில் விறுவிறுப்பாக செல்லும் மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களை எந்த இடத்திலும் போரடிக்காமல் பார்த்துக் கொள்ளும்.