Home ஆன்மிகம் மிதுனம் ராசிக்கு…! குடும்பத்தில் இருந்த மருத்துவ செலவுகள் குறையும்…!! பெண்கள் குழப்பத்தை சரி செய்வீர்கள்…!!

மிதுனம் ராசிக்கு…! குடும்பத்தில் இருந்த மருத்துவ செலவுகள் குறையும்…!! பெண்கள் குழப்பத்தை சரி செய்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மிதுனம் ராசி அன்பர்களே…! எந்த ஒரு காரியத்தையும் சுறுசுறுப்பாக செய்வீர்கள்.

துல்லியமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். நடக்காமல் இருந்த காரியம் நடக்கும். திட்டமிட்ட பணிகள் எல்லாம் சூடு பிடிக்கும். கூடுதல் கால அவகாசத்தில் எல்லாம் நிறைவேறும். உத்தியோகத்தில் மறைமுக போட்டிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். வெளியூர் பயணத் திட்டத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்வீர்கள். கோபத்தை குறித்து இனிமையாக பேசுவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தில் இருந்து மருத்துவ செலவு குறையும். உற்றார் உறவினர் உதவி கிடைக்கும். தேவையில்லாத செலவுகளை குறைப்பதால் கடன் குறையும். பெண்கள் எதிலும் குழப்பம் அடைய வேண்டாம். பெண்கள் சிரமங்களை சரி செய்து நிம்மதியான வாழ்க்கைக்கு அடித்தளம் நீட்டுவீர்கள்.

காதலைப் பொறுத்தவரை யோசிக்க வேண்டும். முடிவுகளை தெளிவாக எடுக்க வேண்டும். காதலுக்காக கோவப்படாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் எடுத்தோம் கவுத்தோம் என்று செயல்படக்கூடாது. படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஆறு. அதிர்ஷ்டமான நிறங்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.