ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மிதுனம் ராசிக்கு…! தெய்வீக நாட்டம் இருக்கும்…! வீட்டு தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்…!! Rugaiya beevi8 January 202504 views மிதுனம் ராசி அன்பர்களே…! மன அழுத்தம் வெளிப்படும். மனக்கவலையை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டீர்கள். எதையோ நினைத்து கவலைப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கும். செலவுகளை கட்டுப்படுத்துவது சிறப்பு. நண்பர்களால் சிக்கல் உண்டாகும். உறவினர்களிடம் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரும். உடல் நலனில் சில அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தெய்வீக நாட்டம் செல்லும். வீட்டு தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பொருளாதார வளமும் சிறப்படையும். காரிய அனுகூலம் உண்டாகும். செய்யும் வேலைகளில் தடை வந்தாலும் அதனை முடித்துக் காட்டுவீர்கள். உணர்ச்சிகரமாக பேசுவீர்கள். கணவன் மனைவியுடைய அன்பு வெளிப்படும். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகளும் சரியாகும். சிவ நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். சுப செலவுகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். கூட்டு முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும். தினசரி வருமானத்தை கூட்டிக் கொள்ள ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுக்கு நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருக்கும். கூட்டு முயற்சி பெண்களுக்கு வெற்றியை கொடுக்கும். பெண்கள் அயராமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். பெண்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும்.. காதல அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும். மாணவர்கள் துடிப்புடன் செயல்பட்டு உற்சாகமாக இருப்பீர்கள். மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஜெயிக்கும் அம்சம் இருக்கும். முயற்சி செய்தால் ஜெயித்து விட முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஒன்று மற்றும் ஐந்து. அதிர்ஷ்டமான நிறங்கள் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.