மின்சாரம் தாக்கியது…ஒரேகுடும்பத்தை சேர்ந்த 3பேர் பலி…!!!

தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் அருகே ஜெக்காலனி அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த வெங்கடேஷ் அவருடைய மனைவி மாதவி இவர்களின் மகன் ஹரிகிருஷ்ணன். இவர்கள் நேற்று விடுமுறை என்பதால் 3 பேரும் வீட்டில் இருந்தார்கள். அப்போது வெங்கடேஷ் குளிக்க சென்றுள்ளார். அப்போது குளியலறையின் சுவிட்சை போட்டுள்ளார் அப்பொழுது மின்சாரம் தாக்கிய சத்தம் கேட்டு மனைவி மற்றும் மகன்கள் இருவரும் ஓடி சென்று அவரை கையை பிடித்து இழுத்தனர்.

அதில் இவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் 3 பேரும் குளியலறையில் உயிரிழந்தனர். அவருடைய வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண் சிறிது நேரம் கழித்து வந்தார். வீட்டு கதவு நீண்ட நேரம் தட்டியும் திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த அவர் அக்கம் பக்கத்தினரோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மூன்று பேரும் இறந்து கிடந்தனர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரத பரிசோதத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!