மின் அளவீடு பதிவேற்றதில் தவறு.. மின் கணக்கீட்டாளர் அதிரடி பணியிடை நீக்கம்.!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வல்லநாடு அருகே இருக்கும் வசவபுரத்தில் இருக்கும் ஒரு டீ கடைக்கு மின் கட்டணம் ரூபாய் 61 ஆயிரம் என வந்துள்ளது. இது பற்றி சோசியல் மீடியாவில் செய்திகள் பரவியது. இதை அடுத்து தூத்துக்குடி ஊரக உதவி செயற்பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அலுவலர்கள் கள ஆய்வில் ஈடுபட்டார்கள். அதில் அந்த கடையில் ஏழு கிலோ வாட் மின் பலு இணைக்கப்பட்டு பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது.


மேலும் மின் அளவை மூலம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அவர் இரண்டு கிலோ வாட் மின் இணைப்பை விட 4. 47 கிலோ வாட் மின்புலம் அதிகமாக பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் மின் கணக்கீட்டாளர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் அளவீடு செய்யும் போது மின் நுகர்வோர் குறைவாக மின்சாரம் பயன்படுத்தி வருவதாக கம்ப்யூட்டரில் தவறாக பதிவேற்றம் செய்திருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் கவன குறைவு காரணமாக மின்வாரியத்தின் நற்பெயரை களங்கப்படுத்தும் வகையில் செயல்பட்டதாக மின் கணக்கீட்டாளர் கோமதி என்பவரை மின்வாரிய செயற்பொறியாளர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!