பீகாரில் தொடர்ந்து பாலம் இடிந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் 17 கிராமங்களை இணைக்கும் ஒரே பாலம் நேற்று முன்தினம் இடிந்து உள்ளதால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்த விபத்து குறித்து மாவட்ட அதிகாரி கூறுகையில்” பாலம் இடிந்த விவகாரத்தில் உயிரிழப்புகளும் ஏற்படவில்லை யாரும் காயப்படவும் இல்லை “எனக் கூறியுள்ளார் . மேலும் இந்த “பாலம் 48 மணி நேரத்திற்குள் சரி செய்யப்படும்” எனக் வட்ட அதிகாரி அனில்குமார் அவர்கள் கூறியுள்ளார்.
கடந்த மூன்று வாரத்தில் 12 பாலங்கள் இடிந்த காரணத்தால் மாநில அரசு 16 பொறியாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது . மேலும் முதலமைச்சர் நிதீஷ் குமார் அவர்கள் கடந்த வாரம் மாநிலத்தில் உள்ள அனைத்து பழைய பாலங்களையும் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.