சினிமா செய்திகள் தமிழ் சினிமா மீண்டும் நயன்தாரா தான்…. “மூக்குத்தி அம்மன் 2” பற்றி வீடியோவுடன் வெளியான அறிவிப்பு…!!! Sowmiya Balu13 July 2024066 views நடிகை நயன்தாரா நடிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்’. இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இதனைத் தொடர்ந்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும் அதில் நயன்தாராவுக்கு பதிலாக நடிகை திரிஷா நடிக்கப் போகிறார் என தகவல் இணையத்தில் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் ”மூக்குத்தி அம்மன் 2” குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மீண்டும் நயன்தாரா தான் மூக்குத்தி அம்மன் 2 ல் அம்மன் ரோலில் நடிப்பது உறுதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்குனர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.