ஆன்மிகம் ராசி பலன் ஹிந்து மீனம் ராசிக்கு…! புதிய முயற்சி கண்டிப்பாக வெற்றியை கொடுக்கும்…!! வெளி உலக தொடர்பை விரிவு படுத்துவீர்கள்…!! Rugaiya beevi30 October 202404 views மீனம் ராசி அன்பர்களே…! வாழ்க்கையில் இனிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். முன்னேற்றம் கண்டிப்பாக உண்டாகும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். வாழ்க்கையில் இனிய மாற்றம் இருக்கும். முயற்சிகள் கண்டிப்பாக திரு வினை ஆகும். இயன்ற அளவில் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்கள். தொழில் வியாபாரம் வளர்ச்சியை கொடுக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். நீண்ட நாள் ஆசை கனவு பூர்த்தியாகும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். எதிர்காலம் குறித்த சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பாராட்டும் புகழும் ஏற்படும். பெண்கள் கூடுதல் முயற்சியால் வெற்றி காண்பீர்கள். சிரமம் பார்க்காமல் குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொடுப்பீர்கள். மாமன் மைத்துனன் வகையில் உதவி கிடைக்கும். காதலில் பிரச்சனை இல்லை தேவையில்லாமல் காதலைப் பற்றி யோசிக்க வேண்டாம். நடப்பது நடக்கட்டும் என்று விட்டுவிடுங்கள். பெண்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். மாணவர்கள் மிகவும் பொறுமையாக இருங்கள் கல்வியில் வெற்றி வரும்வரை. கல்விக்கான செலவுகளை ஈடு கட்டி விடுவீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் இரண்டு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.