செய்திகள் மாநில செய்திகள் முண்டகை நிலச்சரிவு…குடும்பத்தை காப்பாற்றிய யானை கூட்டம்… Sathya Deva3 August 20240132 views முண்டகையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலைத் தோட்டத்தில் 18 வருடங்களாக சுஜாதா அனி நஞ்சிரா என்ற பெண் வேலை செய்து கொண்டு வருகிறார். இவர் தனது மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சுராஜ், மிருதுளா ஆகிருடன் வசித்து வருகிறார். கடந்த திங்கட்கிழமை இரவு கனமழை தொடங்கிய நேரத்தில் இவர்கள் வீட்டை தண்ணீர் சூழ ஆரம்பித்தது. அங்கிருந்து அருகில் உள்ள குன்றுக்கு தப்பினோம் என்று கூறினார். ஆனால் காபி மரங்களால் மூடப்பட்டுள்ள அந்த குன்றில் யானைகளும் தஞ்சமாக இருந்தன. எங்களுக்கு சில அங்குல தூரத்தில் தான் யானை கூட்டம் இருந்தது. அதன் கால்களுக்கு இடையில் தான் நாங்கள் இரவு பொழுது முழுவதும் பயத்துடன் கழித்தோம் என்று அவர் கூறினார். அந்த யானையின் கண்களை பார்க்கையில் எங்களின் இக்கட்டான சூழ்நிலையை அது புரிந்து கொண்டது போல் தோன்றியது. இதனால் யானை கூட்டம் ஆக்ரோஷமாகி எங்களை தாக்கம் உட்படவில்லை எனவும் காலையில் மீட்பு குழுவினர் எங்களை வந்து மீட்கும் வரை யானைகள் எங்களின் பாதுகாப்புக்கு அரணாக அங்கேயே நின்றிருந்தன என்று கூறியுள்ளார். சூரியன் உதிக்கையில் யானையின் கண்கள் துளிர விட்டு ஆசிர்வதிப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இது எனது வாழ்க்கையின் மறக்க முடியாத சம்பவம் என்று கூறியுள்ளார்.