செய்திகள் மாநில செய்திகள் முதலமைச்சர் ரங்கசாமி…பல்வேறு திட்டம் வெளியீடு…!!! Sathya Deva14 August 2024048 views புதுச்சேரி சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் தங்கள் துறைகளில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டனர். அதில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். பிரதமர் கல்வீடு கட்டும் திட்டத்திலும் மத்திய அரசு உயர்த்தி அளித்துள்ள, ரூ.2¼ லட்சத்துடன், சேர்த்து ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கூறியுள்ளார். நெல்லுக்கான ஊக்கதொகை கிலோவுக்கு ரூ.2 அதிகரிக்கப்படும். கால்நடை விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் மாட்டு தீவனம் ஆண்டு முழுவதும் வழங்கப்படும். மாணவர்களின் ஊட்டச்சத்து அதிகரிக்க வாரம் 5 நாட்களும் சிறுதானிய பிஸ்கட், சிறுதானியம், வேர்க்கடலை, எள், பொட்டு கடலை மிட்டாய் ஆகியவை மாலை சிற்றுண்டியாக வழங்கப்படும். பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், கலை, அறிவியல், வேளாண், சட்டம் போன்ற பிற பிரிவுகளில் சென்டாக் மூலம் சேரும் மாணவர்களுக்கு காமராஜர் நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும். அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத அரசு பள்ளி இடஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு அளிக்கப்படும். மேலும் சட்டமன்றத்திற்கான அடிக்கல் நாட்டி கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படும்என பல திட்டங்களை பற்றி கூறியுள்ளார்.