முதியவரிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர்…. வைரலாகும் வீடியோ….!!

இயக்குனர் சேகர் கம்முலா தயாரிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் மூலம் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் குபேரா. இத்திரைப்படத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா மற்றும் நாக அர்ஜுனா போன்ற பிரபல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இதில் பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஓரளவு முடிவு பெற்ற நிலையில் கடைசி கட்ட படப்பிடிப்பானது ஜதராபாத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பிற்காக தனுஷ் மற்றும் நாக அர்ஜுனா ஜதராபாத் சென்றிருந்தனர்.

அவ்வப்போது ஜதராபாத் விமான நிலையத்தில் வைத்து நாக‌ அர்ஜுனாவின் ரசிகரான முதியவர் ஒருவர் அவரிடம் பேச முயற்சித்தார். ஆனால் நாக அர்ஜுனாவின் பாடி கார்ட் அவரை தள்ளிவிட்டனர். இதைப் பார்த்த நாக அர்ஜுனா மற்றும் அவருடன் வந்த நடிகர் தனுஷ் ஆகிய இருவரும் முதியவர் கீழே விழுவதை பார்த்தும் அவருக்கு உதவாமல் சென்றனர். தற்போது இந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

இதைப் பார்த்த மக்கள் நாக அர்ஜூனா செய்தது தவறான செயல் அவர் கட்டாயமாக அந்த முதியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், இதை அறிந்த நாக‌ அர்ஜுனா “நான் ஏதோ கவனத்தில் சென்று விட்டேன் “என்னை மன்னித்து விடுங்கள். இனிமேல் இது மாதிரி தவறு நடக்காது என்று தனது எக்ஸ் தள பதிவில் பதிவிட்டுள்ளார்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!