‘முதுநிலை நீட்’ நுழைவுத் தேர்வு….விரைவில் கலந்தாய்வு அறிவிப்பு…!!!

நாடு முழுக்க அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழங்களில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ படிப்பு மாணவர் சேர்க்கை ‘முதுநிலை நீட்’ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்ததேர்வை, மருத்துவ அறிவியலுக்கான தேர்வு வாரியம் (என்.பி.இ.எம்.எஸ்) நடத்தி வருகிறது. நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்றது.

நாடுமுழுக்க 170 நகரங்களில் 500 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை, நாடு முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 28 ஆயிரம் மருத்துவர்கள் எழுதினர். இந்த நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியாகி இருப்பதை அடுத்து, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!