செய்திகள் மாநில செய்திகள் முந்தி செல்வதில் பிரச்சனையா… துப்பாக்கியால் சுட்ட நபர்…!! Sathya Deva21 July 20240102 views உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் கவின் தசூர். இவர் அமெரிக்காவில் வசித்து வந்தார். 2018ல் மெக்கானிக் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகு சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை தொடர்து நடத்தி வருகிறார். இவர் சிந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மாதம் தான் ஆகிறது. இவர் கடந்த 16ஆம் தேதி குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது முந்தி செல்வது தொடர்பாக லாரி டிரைவருக்கும் கவினுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் லாரி டிரைவர் கவின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார் .இதனால் சம்பவ இடத்திலே கவின் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். அவர் மனைவி கண் முன்னே நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அந்த லாரி டிரைவர் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கவின் குடும்பத்தார் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் கவின் குடும்பத்தில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.