Home செய்திகள் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி….வழக்கு ஒத்திவைப்பு…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி….வழக்கு ஒத்திவைப்பு…!!!

by Sathya Deva
0 comment

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில்பாலாஜி மீதான 3 வழக்குகள் மீதும் அமலாக்கத்துறை விசாரணை நடத்துகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக சுப்ரீம் கோர்ட் கூறிய நிலையில் வழக்கை பிற்பகலுக்கு ஒத்திவைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. அமலாக்கத்துறை கோரிக்கைய நேற்று பிற்பகல் இறுதி வழக்காக விசாரிப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமின் மனு பிற்பகலில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனுவை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு பட்டியலிட உத்தரவிட்டனர். ஆகஸ்ட் 20-ந்தேதி முதல் வழக்காக பட்டியலிடப்படும் என்றும் தாங்கள் எழுப்பிய கேள்விக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், ஜாமின் வழக்கை ஆகஸ்ட் 20-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.