Home செய்திகள் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… செப். 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு… செப். 2ம் தேதிக்கு ஒத்திவைப்பு…!!!

by Sathya Deva
0 comment

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள்,செந்தில் பாலாஜி மீதான விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆவணங்களையும், ஆவணங்களின் நகல்களையும் சமர்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் நகல்களை ஒருவாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும், செந்தில் பாலாஜி வழக்கில் நியமனம்செய்யப்பட்டுள்ள சிறப்பு அரசு வழக்கறிஞர் பெயரையும் பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்தனர். இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை செப். 2ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.