முன்னாள் வெளியுறவு துறை மந்திரி நட்வர்சிங் காலமானார்…மோடி இரங்கல்…!!!

முன்னாள் வெளியுறவு துறை மந்திரி நட்வர்சிங் (வயது93). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் டெல்லி அருகே குருகிராமில் வசித்து வந்தார். இவர் வயது மூப்பு காரணமாக உடல் நிலை சரியில்லாமல் கடந்த 2 வாரமாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். 2004-ல் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அமைச்சரவையில் வெளியுறவு துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர். இவர் இந்திய வெளியுறவு துறை அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் ‘ஒன் லைப் இஸ் நாட் எனஃப்’ என தனது சுயசரிதை உள்பட பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். இவர் பத்மபூஷண் விருது உள்பட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது. நட்வர்சிங் மறைவு குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நட்வர்சிங் மறைவு செய்தி கேட்டு வேதனையுற்றேன். அவர் வெளியுறவு அதிகாரியாகவும், மந்திரியாகவும் ஆற்றிய அரும்பணிகள் என்றும் மறக்க முடியாது. அவர் சிறந்த எழுத்தாளரும் கூட இந்த துக்கத்தில் அவரது குடும்பத்தினருடன் நானும் பங்கெடுக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி நட்வர்சிங்குடன் தான் எடுத்துக் கொண்ட பழைய படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!