மும்பை மருத்துவமனையில்…பெண் மருத்துவருக்கு பாலியல் தொந்தரவு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சியான் மருத்துவமனையில் இன்று அதிகாலை3.30 மணியளவில் முகத்தின் காயங்களுடன் ஒருவர் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவருக்கு பணியில் இருந்த பெண் மருத்துவர் சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. காயங்களுடன் வந்த நபருடன் உறவினர்களும் வந்தனர். அந்த உறவினர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் ஆறு பேரும் பெண் மருத்துவருக்கு பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றனர். அவர்களிடமிருந்து தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியில் பெண் மருத்துவருக்கு சில காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

பின்பு அந்த இடத்தில் இருந்து அது ஆறு பேரும் தப்பி சென்று விட்டனர். இதை எடுத்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவர் போலீசில் புகார் அளித்துள்ளார். கொல்கத்தாவில் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பல போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் மும்பையில் இரவு பணியின்போது மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவம் மருத்துவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!