செய்திகள் தேசிய செய்திகள் மெட்ரோரயிலில் அத்துமீறி நடந்துக்கொண்ட காதல்ஜோடி…. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!!!! dailytamilvision.com17 April 20240276 views டெல்லி மெட்ரோ ரயில்களில் கடந்த காலங்களில் இளம் ஜோடிகள் முத்தமிட்டு கொள்வது, கட்டியணைத்து கொள்வது உள்ளிட்ட சில்மிஷங்களில் ஈடுபட்ட வைரல் வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன்படி தற்போது மெட்ரோ ரயில் ஓடிகொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவரும் இளம்பெண்ணும் கட்டியணைத்து கொண்டு முத்தமிட்டு கொள்ளும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஆனந்த் விஹார் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்த காதல் ஜோடியின் ரொமான்ஸ் அரங்கேறியுள்ளது. ஆகவே இந்த இளம் ஜோடி மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.