Home செய்திகள் மேற்கு வங்காளத்தில் பேரணி…6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…!!!

மேற்கு வங்காளத்தில் பேரணி…6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு…!!!

by Sathya Deva
0 comment

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி பெண் டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்த கொடூர கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசுக்கு எதிராக கடும் விமர்சனம் எழுந்து வருகிறது. மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் உள்ள ரிஜிஸ்டர் செய்யாத மாணவர்கள் அமைப்பு நபன்னோ நோக்கி இன்று பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. நபன்னோ மேற்கு வங்காள மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள இடம். முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பல முக்கிய மந்திரிகள் அலுவலகம் இங்கு உள்ளது. இந்த நிலையில் பேரணி வன்முறையாக வெடித்துவிடக் கூடாது என்பதால் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நல்ல எண்ணம் கொண்ட குடிமக்களின் கோபத்தைத் தவறாகப் பயன்படுத்தி மேற்கு வங்கத்தில் பிரச்சனையையும் அராஜகத்தையும் உருவாக்குவதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்த ஒருவர், நட்சத்திர ஓட்டலில் அரசியல் கட்சிதலைவர் ஒருவரை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 6 ஆயிரம் போலீசார் குவிக்கப்படுவார்கள். தடுப்பு அமைக்கும் 19 இடங்களை கண்டறிந்துள்ளோம். 26 டிசிபி தலைமையில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நபன்னோ பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.