மேஷம் ராசி அன்பர்களே…! பேச்சாற்றல் வெளிப்படும் சூழல் உருவாகும்.
அற்புதமாக பணிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நட்பின் பெருமையை உணர்ந்து கொள்வீர்கள். பெண்களுக்கு நல்ல வரன்கள் வரும். மனதிற்குள் ஒருவித நம்பிக்கை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை வளரும். அரசியல்வாதிகள் நட்பு உண்டாகும். பதவி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கு. அனைத்து விதமான நல்லதும் நடக்கும். மேலதிகாரிகள் கொடுத்த வேலையை திறமையாக செய்து முடிப்பீர்கள். அன்பும் பண்பும் மிகுந்து காணப்படும். பாராட்டும் புகழும் கிடைக்கும். குடும்பத்தில் எந்த டென்ஷன் நீங்கும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலும்.
நண்பர்களால் தேவையான அளவு உதவிகள் கிடைக்கும். பெண்கள் குழப்பம் அடைய வேண்டாம். பெண்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். காதல் போன்ற விஷயத்தில் தெளிவு அவசியம். குழப்பமில்லாமல் முடிவுகளை கவனமாக எடுங்கள். காதல் வெற்றி நோக்கி செல்லும். மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுவிதமான யோசனை இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீளம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு. அதிர்ஷ்டமான நிறங்கள் நீளம் மற்றும் மஞ்சள் நிறம்..