சினிமா செய்திகள் தமிழ் சினிமா யோகி பாபு நடிக்கும் “போட்”…. தேவா குரலில் வெளியான புதிய பாடல்… இணையத்தில் வைரல்…!!! Sowmiya Balu19 July 2024094 views தமிழ் சினிமாவில் யோகி பாபு காமெடி நடிகராக மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”போட்”. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கௌரி கிஷன், விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் இரண்டாவது பாடலான தகிட தகிமி என்ற பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.