சினிமா செய்திகள் தமிழ் சினிமா யோகி பாபு நடிக்கும் “போட்”…. அடுத்த பாடல் ரிலீஸ்…. வெளியான அறிவிப்பு…!!! Sowmiya Balu18 July 20240122 views தமிழ் சினிமாவில் யோகி பாபு காமெடி நடிகராக மட்டுமின்றி ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் ”போட்”. இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், கௌரி கிஷன், விஜயன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் அடுத்த பாடலான ‘தகிட ததிமி’ நாளை மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.