செய்திகள் ரயில் தடம் புரண்டது…. 4 பயணிகள் பலி… 20 பேர் படுகாயம்….!! Sathya Deva19 July 20240101 views உத்திரபிரதேச மாநிலத்தில் சண்டிகரிலிருந்து திப்ரூகர் செல்லும் விரைவு ரயில் கோண்டா பகுதியில் மதியம் 2:35 மணி அளவில் சென்ற போது தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் நான்கு பெட்டிகள் கவிழ்ந்தன. இது பற்றி தகவல் அறிந்த மீட்பு குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளது. மந்திரி யோகி ஆதித்யா அதிகாரிகளுக்கு நடவடிக்கைகளை விரைந்து எடுக்கும் படி உத்தரவு கொடுத்தார் . .இதன்படி விபத்து நடந்த பகுதிக்கு 40-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் சென்றுள்ளனர் . அங்கு 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் தடம்புரண்ட ரயில் விபத்தில் 4 பயணிகள் பலி ஆகினர் என்றும் இருபதுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என முதல் துணை மந்திரி தெரிவித்துள்ளார்.