ரயில் நிலையத்தில் கிலோ கணக்கில்.. சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள்.. போலீஸ் விசாரணை.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பள்ளிவிளை ரயில் நிலையம் அருகே ரேஷன் அரிசி படிக்க வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்ட வழங்கல் அதிகாரி அணில் குமார் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டார்கள்.


அப்போது ரயில் நிலையம் அருகே மறைவான பகுதியில் பிளாஸ்டிக் மூட்டைகளில் 650 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதிகாரிகள் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து தமிழ்நாடு அரசு முகப்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தார்கள். இந்த ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

மாணவிக்கு பாலியல் தொல்லை… வெளியான திடுக்கிடும் உண்மை… நாகர்கோவிலில் பரபரப்பு…!!

அதிமுக கிளை செயலாளர் மர்ம மரணம்… போலீஸ் விசாரணை… சேலம் அருகே பரபரப்பு…!!

செப்.5… வ.உ.சி.யின் 153-வது பிறந்தநாள்… அதிமுக சார்பில் மரியாதை…!!