உலக செய்திகள் செய்திகள் ரஷ்யாவில் இயந்திர கோளாறால் தரையிறக்கப்பட்ட விமானம்…. மீண்டும் பயணிகளுடன் புறப்பட்டது….!!! Sathya Deva21 July 20240131 views டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 225 பயணிகள் மற்றும் 19 பணியாளர்கள் இருந்தனர் என கூறப்படுகிறது. இந்த விமானத்தில் திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ரஷ்யாவின் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு விமானம் திருப்பி விடப்பட்டு அங்கு அவசரமாக தரை இறக்கப்பட்டது. அந்த பயணிகளை வேறொரு விமான மூலம் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து மாற்று விமானம் ரஷ்யாவில் கிராஸ்னோயார்ஸ்க் விமான நிலையத்திற்கு சென்று அடைந்தது. இதில் பயணிகளுக்கு தேவையான உணவு அத்தியாவசிய பொருட்களும் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் தனது வலைதள பக்கத்தில் கூறும் போது ஏ.ஐ -183 விமான பயணிகளுடன் ஏர் இந்தியா மீட்பு விமானம் ஏ.ஐ 1179 கிராஸ்னோயார்ஸ்க்கில் இருந்து சான் பிரான்சிஸ்கோவிற்கு புறப்பட்டது என கூறப்படுகிறது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் கிராஸ்நோயார்ஸ் விமான நிலைய அதிகாரிகள், விமான போக்குவரத்துக்கான ரஷ்ய கூட்டாட்சி நிறுவனம் பயணிகளுக்கு உதவியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறுகின்றது .