ராகுல் காந்தியை சந்தித்தார்…மனு பாக்கர்…!!!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில் 200-க்கு மேற்பட்ட நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தற்போது ஒலிம்பிக் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா இதுவரை 4 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என மொத்தம் 5 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெல்லி திரும்பிய மனுபாக்கர் பாராளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அறையில் ராகுல் காந்தியை தனது குடும்பத்தினருடன் இன்று சந்தித்தார். அப்போது இரு வெண்கல பதக்கங்களை வென்ற மனு பாக்கருக்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்ததுடன், அவர்களுக்கு இனிப்பும் வழங்கினார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!